செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

துரித உணவை உண்பதின் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்...!!

துரித உணவை உண்பதின் மூலம் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றங்கள் உண்டாகலாம்.
துரித(உடனடி) உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது. இதைத் தவிர்க்கும்  பொருட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவற்றை  சேர்க்கிறார்கள். இது மனித உடலுக்கு ஊறு விளைவிக்கிறது.
 
துரித உணவில் உள்ள அதிக கொழுப்புகள் கடுமையாக இதயத்தை பாதிக்கும். உடனடி உணவுகல் கெடாமல் இருக்க சேர்க்கப்படும்  பதப்படுத்தும் பொருள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவர்றைப் பாதிக்கும்.
 
வீட்டில் தயாராகும் உணவு வகைகளை விட கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகள் ஊட்டச் சத்துக்கள் குறைந்தவையாக உள்ளது. துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் வளர்ச்சியைக் குறைந்து நோய்  எதிர்ப்பு சக்தியில்லாமல் செய்கிறது.
 
துரித உணவுகள் சாப்பிடுவதாலும், உடற்பயிற்சி செய்யாததாலும், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் அலட்சியம் காட்டினால்,  உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
 
ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும். தலைவலி மனச்சோர்வு,  உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற வியாதிகளும் உண்டாகும். நொறுக்குத்தீனி துரித உணவுக் கலாசாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுகின்றன என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.