வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அதிக சத்துக்களை கொண்ட பச்சைப் பயிறு!!

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும்.
வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக  சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.
 
பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான உப்பு சேர்த்து கிளறிய பின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.
 
2 ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு பெறும். 
பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.
 
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை  பயறை சேர்த்துக் கொள்ளலாம்.