செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முதுகுவலி வருவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும் !!

முதுகுவலி என்பது நோயல்ல. முதுகு வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகுப் பகுதியைச் சார்ந்த தசைகள், எலும்புகள், தசைநாண்களில் ஏற்படுகிற பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணம்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு முதலில் முதுகில் வலி ஏற்பட்டு பின்னர் வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.
 
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள். ஒரே நிலையில் நீண்ட நேரம் படிப்பது அமர்வது என பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது.
 
எப்போதும் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் நீண்ட நேரம் அமரும் போது முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம். கூன் போடாமல் நிமிர்ந்த நடை நடக்க வேண்டும்.
 
கால்சியம், பால், கொண்டைக் கடலை, முட்டையின் வெள்ளைக் கரு, உளுந்து, போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
எந்த வேலையையும் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்த வாறு செய்யாதீர்கள். வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம்.
 
யோகாசனம், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும். முதுகுவலி உள்ளவர்கள் நல்ல சமமான இடத்தில் படுக்கவேண்டும்.
 
குளிர் பானங்கள், கோக் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்பாரிக் அமிலம் சேர்ப்பதால் மிகவும் தீங்கானது. இதனால் எலும்புகள்  வலுவிழந்துவிடும். எனவே, இந்தப் பானங்களை அருந்தக் கூடாது.