வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல நோய்களுக்கும் நிவாரணியாக உள்ள கருஞ்சீரகம்...!!

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.

பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 
கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.
 
தைமோ குவினோன் என்ற ஒரு அபூர்வ வகையான இயர்க்கை சத்து கருஞ்சீரகத்தில் அடங்கியுள்ளது. மேலும் கொழுப்பு அமிலங்கள், கரோட்டின் ,கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளன.
 
கருஞ்சீரகத்தை பாலில் கலந்து உன்பதன் மூலமாக சளி இருமல் போன்ற நோய்களுக்கு தீர்வு வழங்குகிறது. காயங்கள் ஏற்ப்பட்ட இடங்களில் இந்த கருஞ்சீரகத்தை  பொடியாக்கி தடவுவதன் மூலமாக உடனடியாக தீர்வு கிடைக்கிறது.
 
கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
 
கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை  என இருவேளை சாப்பிடலாம். சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.
 
வெந்நீரில் சிறிதளவு தேன் மற்றும் கருஞ்சீரகம் கலந்து குடித்துவர சிறுநீரக கற்கள் நீங்கும். தலைமுடி பிரச்சனைகளை தீர்வு கானும். மேலும் உடலில் உள்ள  நச்சுதன்மை வாய்ந்த அமிலங்களை விரைவில் அகற்றிவிடும்.