தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!
குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
சருமத்துக்கு மிகவும் சிறந்த பழமாக கொய்யா விளங்குகிறது. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா பழம் பயன்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப் படுத்துகிறது.
கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு தீர்ந்து விடும்.
அஜீரண கோளாறினால் பாதிப்படைந்தவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர எளிதில் ஜீரண சக்தி ஏற்பட்டு வயிற்று உப்பசம் போன்றவை ஏற்படாமல் சரி செய்யும்.