ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தோப்புக்கரணம் தினமும் ஐந்து நிமிடம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்..!!

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச்  சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது. அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து  கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.
தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட  ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள்  வலுப்பெறுகின்றது.   
 
இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி  செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.

ஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு  மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால்  குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று  ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.