திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பிளாக் டீ தொடர்ந்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் !!

பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும். 

பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
 
பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
 
பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.  இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும்.
 
ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
 
கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.