ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தலைமுடி உதிர்வை தடுத்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அழகு குறிப்புகள் !!

முடி உதிர்வது என்பது ஒரு தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் ஊட்டசத்து குறைபாடு ஆகும். போதுமான அளவு புரோட்டின் சத்து குறைபாட்டினாலும் தலை முடி உதிர்கிறது.

அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வத்தைத் தடுக்கலாம். வாரம் இருமுறையாவது தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 
 
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்ததால் முடி உதிர்வு நின்று அடர்த்தியான கூந்தலை பெறமுடியும். இதை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அத்துடன் இளநரை வருவதையும் தடுக்கலாம்.
 
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைக்கு குளிக்கும் போது முடி உதிர்வை தடுக்கலாம். சோம்பினை நன்கு அரைத்து தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும். 
 
நாட்டு மருந்து  கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும்,அதை வாங்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வு முற்றிலும் நின்று விடும்.
 
கறிவேப்பிலையை அதிகம் உணவில் எடுத்து கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். இரும்பு சத்து, புரோட்டின் நிறைந்துள்ள உணவு பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதின் மூலம் முடி உதிர்வதை தவிர்க்கலாம். 
 
இளஞ்சூடான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.