வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (18:11 IST)

செரிமான பிரச்சனைகளை போக்கும் பார்லி !!

பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் நோய் தொற்றுகள், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதே போன்று, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது அனீமியா எனப்படும் ரத்த சோகை ஏற்படுகிறது.
 
இந்த ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு,வைட்டமின் பி பன்னிரண்டு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
 
அந்த வகையில் பார்லியில் வைட்டமின் பி பன்னிரண்டு அதிகம் நிறைந்துள்ளது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி வைத்து குடித்தால் ரத்த சோகை ஏற்படாமல் காக்கும். உடலுக்கும் வலிமையைத் தரும்.
 
அதே போன்று, கோதுமையிலும், ஓட்ஸ்சிலும் அதிக நார்ச்சத்து இருந்தாலும் அவை தயாரிக்கும் பொழுது, நார்ச்சத்து ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், பார்லியில் , பீட்டா குளுக்கோஸ், நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை.
 
இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் பார்லி அரசி கஞ்சியினை தினசரி தினமும் கஞ்சியாக சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மேலும், பார்லி அரசியில் உள்ள வைட்டமின் டி நரம்புகளையும் பலப்படுத்தும்.
 
பார்லி அரசியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்புகளை வலிமை படுத்துகிறது. முக்கியமாக இதில் இருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை, சரி செய்ய உதவுகிறது. எனவே பார்லி கஞ்சி தினமும் குடித்து வருவதன் மூலமாக எலும்பு மற்றும் பற்கள் நன்கு உறுதி அடையும்.
 
அன்றாட உணவில் பார்லி அரசி சேர்த்துக் கொண்டு வந்தால் பித்தப்பை கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் எளிமையாக கரையும் தன்மை உடைய புரதம் பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது.