1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வழுக்கை விழுதலை இயற்கை முறையில் தடுக்கும் வழிமுறைகள்

நெல்லிக்காயை 2 கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, நெல்லிக்காயை அரைத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எணணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடியின்  வளர்ச்சி தூண்டப்படும்.
சின்ன வெங்காயத்தை அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர்வதை காணலாம்.
 
பெண்கள் , ஆண்கள் என இருவருக்குமே சரி வழுக்கை விழுதல் என்பது அவர்களின் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதைத்தவிர, 60 வயதுக்கு மேல்  விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம், புகைப்பிடிப்பது,  மரபு சாந்த பிரச்சனைகள் மற்றும்  தவறான உணவு பழக்கவழக்கங்கள்.
 
முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. உருளைக்கிழங்கில் புரோட்டீன்  உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம்  ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
 
செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
 
முட்டையை 2 எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி தடவி  20 நிமிடம் ஊற வைத்து, பின்பு தலை முடியை அலச வேண்டும்.