1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையில் கிடைக்கும் அற்புத சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை!!

அரைக்கீரையிலுள்ள சத்துக்கள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது.
அரைக்கீரையை மிளகு ரசத்துடன் உண்ண நோய்களைக் கண்டித்து நல்ல குணமளிக்கும். ஏனெனில் அரைக்கீரை சூடு; மிளகு நீர் குளிர்ச்சி. இவ்விரண்டும் ஒன்று சேருமேயானால் உடல் நலத்தைச் சமன்படுத்தி ஒரு சீராக வைத்திருக்க உதவுகிறது.
 
அரைக்கீரையுடன் துவரம் பருப்பு உலர்ந்த மிளகாயும் சேர்த்து தாளிதம் செய்த அவியலானது இருமல், கபஇருமல் போன்ற நுரையீரல் காய்ச்சல்களைக் கண்டிக்கவல்லது. வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவும். மூலநோய் உள்ளவர்களுக்கு ஆகாது.
 
கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம் (டைபாய்டு) ஆகியவை  தீரும். எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலுவும் வனப்பும் உண்டாகும்.
 
பிடரி வலி, சூதகச் சன்னி ஆகியவை தீரும். அறுகீரை, தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்மறு. இதைப் புளியிட்டுச் சமைப்பது வழக்கம். புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும்.
 
இந்தக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதனால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஓர் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்குச் சீதளம் வராமல், இக்கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள் பாதுகாக்கின்றன. அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குச்  சக்தியையும் பலத்தையும், கொடுக்கின்றன.
 
இந்தக் கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துக் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, பாதரசம், குளிர்க்காய்ச்சல்  ஆகியவைகளை நீக்கும்.
 
பித்த கபசுரம், வாய் உருசியற்றுப் போதல், பசி இல்லாத நிலை ஆகியவைகளுக்கு அரைக்கீரையை பழம்புளியுடன் கடைந்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதினால் இந்த நோய்கள் நீங்கும்.