புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 1 அக்டோபர் 2022 (19:21 IST)

பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யும் அதிமதுரம் !!

Athimathuram
செரிமானம் சீராக நடைபெற அதிமதுரம் மிகவும் உதவுகிறது. வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் உள்ளிட்ட பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த தீர்வாகவும் அதிமதுரம் விளங்குகிறது.

அதிமதுரம் மூலிகை அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. மேலும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்டவை. இது மாதவிடாய் கால தசைப்பிடிப்புக்கும், வலிக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவும். அதிமதுரத்தின் வேர்கள் இலேசான மலமிளக்கியாக செயல்படுவதால் மலச்சிக்கல் இருக்கும் போது இதை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். தொடர்ந்து 4 நாட்கள் தேநீர் குடித்து வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 
பல் சொத்தை, ஈறு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், வாய்ப்புண் உள்ளிட்ட பலவிதமான வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அதிமதுரம் சிறந்த ஒரு தீர்வாக விளங்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, சிரங்கு, படை, அரிப்பு உள்ளிட்ட பலவிதமான தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அதிமதுரம் விளங்குகிறது.
 
பலவிதமான சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அதிமதுரம் விளங்குகிறது. குறிப்பாக ஆஸ்துமா, தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு அதிமதுர வேர் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக திகழ்கிறது. 
 
புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல் அதிமதுரத்தில் உள்ளதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்திடவும் அதிமதுரம் உதவக் கூடிய ஒன்றாக திகழ்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அதிமதுரம் உதவக் கூடிய ஒன்றாக விளங்குகிறது. சில ஆராய்ச்சிகள் அதிமதுரம் உடல் எடையை குறைக்க பங்களிக்கிறது.
 
Edited by Sasikala