வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலுக்கு தேவையான சக்தியை பெற உதவும் ஆப்ரிக்காட் பழம் !!

ஆப்ரிக்காட் பழத்தில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை பெற இந்த ஆப்ரிக்காட் பழத்தில் 74% மாவுச்சத்து உள்ளது. 

ஆப்ரிக்காட் பழத்தில் இரும்புச்சத்து ரத்தத்தில் உடனடியாக கலந்து ரத்த விருத்தியை உண்டாக்கும். இதனால் ரத்த சோகை நோய் குணமாகும்.
 
ஆப்ரிக்காட் பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த பழங்களை நன்றாக மசித்து பாலுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது. ஆப்ரிக்காட் பழத்தை போலவே பழத்தின் கொட்டையிலும் மருத்துவக் குணம் நிரம்பியுள்ளது.
 
இந்த பழத்தில் கால்சியம் சத்து இருப்பதால், இரவில் நரம்பு மண்டலம் அமைதி அடைந்து நன்கு தூங்கவும் முடியும். இதனால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம், மாரடைப்பு இன்றி நலமாக வாழலாம். அதில் அதிக அளவு புரதமும், கொழுப்பும் உள்ளன. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் நோய்களின் கடுமையைத் தனிக்கும்.