1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:25 IST)

மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் - இஸ்ரோ

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா முதல் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
 
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாயை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்ட மங்கள்யான், இன்னும் 33 நாட்களில் செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடையும்  என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 9 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், பூமியில் இருந்து 189 மில்லியன் கி.மீ தூரத்தில் இருப்பதாகவும், மங்கள்யான் இன்னும் 33 நாட்களில் செவ்வாயின் சுற்றுப்பாதையை சென்றடையும்  எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.