ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (13:43 IST)

பழிக்கு பழி.. ஓடிப்போன காதலனின் சகோதரியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலி குடும்பம்..!

தங்கள் வீட்டு பெண்ணை வாலிபர் ஒருவர் இழுத்து கொண்டு ஓடி விட்டதால் அந்த வாலிபரின் சகோதரியை பெண்ணின் குடும்பத்தினர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் ஊரை விட்டு ஓடிய நிலையில் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பெண்ணின் தந்தை ரவீந்திர சிங் அவரது மகன் அமர் சிங், ரவீந்திர சிங் சகோதரர் வீரேந்திர சிங் உள்பட நான்கு பேர் தங்கள் வீட்டு பெண்ணை காதலித்த வாலிபரின் சகோதரி வீட்டுக்கு சென்றனர்.

சகோதரியின் வீடு பஞ்சாப் மாநிலத்தில் இருந்த நிலையில் அந்த பெண்ணை நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இந்த செயலை அவர்கள் மொபைல் போனிலும் வீடியோ எடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தால் இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண் போலீசில் புகார் செய்த நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் வீட்டு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்பதற்காக காதலனின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva