திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:26 IST)

அரிசி திருடியதாக இளைஞர் கொலை : 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு

kerala -madhu
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரிசி திருடியதற்காக இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்,14 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள அட்டப்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் மது(27). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  பிப்ரவரி 22 ஆம் தேதியில், கடைகளில் அரிசி திருடியதாகக் கூறி, ஒரு கும்பல் இவரை அடித்துக் கொன்றது.

இதுதொடர்பாக வழக்கில்,16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வந்தனர். இவ்வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், 16 பேரில், 14  பேர் குற்றவாளிகள் என்று மன்னார்க்காடு  சிறப்பு நீதிமன்ற  நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி, ஹூசைன் மரமார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், ஆபூபக்கர், சித்திக், எட்டாம்பிரதி, நஜூப், ஜைஜூமோன், சதீஸ், சதீஸ், ஹரீஸ், முனீர் ஆகியோரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் அனீஷ் அப்துல், கரீம் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மது கொல்லப்பட்ட வழக்கில்    5 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.