செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:18 IST)

சபரிமலையில் இளம் பெண்கள்: சர்ச்சைக்கு அமைச்சர்கள் மறுப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் சென்றது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


 
 
இதனையடுத்து சமூக வலைதளங்களில் உலா வருவதை போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் யாரும் தரிசனம் செய்யவில்லை என்று கேரள அற நிலையத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாலக்காட்டை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானது. 
 
இது குறித்து விசாரணை நடத்தியதில் தரிசனம் செய்த இரண்டு பெண்களும் 50 வயதுக்கு மேல் ஆனவர்கள் என தெரிய வந்தது. ஆதார் அடையாள அட்டை மூலம் இந்த விபரம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.