செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (17:05 IST)

தேனிலவுக்கு ராமர் கோவிலுக்கு சென்றதால் விவாகரத்து கேட்ட மனைவி.. அதிர்ச்சியில் குடும்பம்..!

Divorce
தேன் நிலவுக்கு கோவா அழைத்து செல்வதாக தன்னிடம் கூறிவிட்டு அதன் பிறகு தனது கணவர் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்றதால் இளம் மனைவி விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
போபாலை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் அவர் தனது கணவரிடம் தேன்நிலவுக்கு கோவா அழைத்துச் செல்லுமாறு கூறியிருந்தார். கணவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு  ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கணவரின் தாயார் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தேனிலவுக்கு கோவா செல்வதற்கு பதிலாக ராமர் கோவிலுக்கு தனது அம்மாவையும் மனைவியை மழைக்குச் சென்றதாக தெரிகிறது.
 
கோவா மற்றும் சில பகுதிகளுக்கு தேனிலவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த  நிலையில் திடீரென கணவரின் தாயாரால் திட்டம் மாறியதை அடுத்து இளம் பெண் அதிருப்தி அடைந்தார். இதனை அடுத்து கணவர் மீது குற்றம் சாட்டி விவாகரத்துக்கு ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் 
 
இதனை அடுத்து அந்த இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran