1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (16:23 IST)

தனியாக சிக்கிய இளம் ஜோடி; 3 பைக், 6 பேர்: நரகமான நொடிகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குழந்தைகள் முதல் கிழவிகள் வரை யாரையும் சில காமுகர்கள் விட்டுவைப்பதில்லை. 
 
அந்த வகையில் பஞ்சாபில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரில் தனது ஆண் நண்பருடன் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரி 10 பேர் கொண்ட கும்பல கூட்டு பலாத்காரம் செய்துள்ளது. 
 
ஆம், பஞ்சாப்பில் உள்ள லூதியானாவிலிருந்து 21 வயது பெண்ணும் அவரது நண்பரும் காரில் பயணம் செய்தனர். அவர்களது காரை 3 இருசக்கர வாகனம் பின்தொடர்ந்து வந்துள்ளது. 
 
ஜாகரன் என்ற இடத்திற்கு வந்ததும், இருசக்கரவாகனத்தில் வந்த 6 பேர் காரை வழி மறித்து காரில் இருந்த பெண்ணை வலுக்காட்டாயமாக பிடித்து வெளியே இழுத்துள்ளனர். 
 
பின்னர் யாருமில்லாத இடத்திற்கு அந்த பெண்ணை இழுத்து சென்று 6 பேரும், மேலும் வேறு 4 பேரை போன் போட்டு அழைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் நண்பர் போலீஸாரிடம் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை நடைபெற்றி வருகிறது. அந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.