வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (14:09 IST)

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

Prajwal Revanna

நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ள நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

கர்நாடக மாநிலத்தின் ஹசன் தொகுதி எம்.பியாக இருந்து வந்த ப்ரஜ்வல் ரேவண்ணா தங்களை வன்கொடுமை செய்ததாக பெண்கள் சிலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தான் வன்கொடுமை செய்த பெண்களை நிர்வாணமாக ரேவண்ணா வீடியோ எடுத்து வைத்திருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அதை தொடர்ந்து ஜெர்மனிக்கு தப்பி சென்ற ரேவண்ணா கடந்த 31ம் தேதி பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் முன்னதாக 2,144 பக்கங்கள் அடங்கிய இரண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவதாக 1,691 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 

 

நிகழ்ச்சி ஒன்றில் அந்த பெண்ணை பார்த்த ப்ரஜ்வெல் ரேவண்ணா அந்த பெண்ணை தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வர செய்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு தனது பேச்சை கேட்காவிட்டால் அதை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

 

மேலும் ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட வகை உள்ளாடையை அணிய வைத்து பலாத்காரம் செய்துள்ளான். மேலும் வன்கொடுமை செய்யும்போது அழக்கூடாது சிரிக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் நிறுத்தி பல சித்ரவதைகளை அளித்துள்ளான். இந்த சம்பவம் குற்றப்பத்திரிக்கையின் மூலமாக வெளிவந்துள்ள நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K