வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:09 IST)

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

 
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றி இருப்பதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதன் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருப்பதால் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை தவிர கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.