உலகின் பணக்கார குடும்பங்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 7வது இடம்

Last Updated: வியாழன், 28 ஜூன் 2018 (20:24 IST)
உலகின் பண்க்கார குடும்பங்களின் பட்டியல் ஒன்றை தனியார் அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. மொத்தம் 25 பணக்கார குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள அந்த நிறுவத்தின் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் 7வது இடத்தில் உள்ளதை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள முகேஷ் அம்பானி என்ற தொழிலதிபரின் குடும்பத்திற்கு 43.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வால்டன் முதலிடத்தில் உள்ளார். ஹையத் ஓட்டல் உரிமையாளர் 15வது இடத்திலும், சாம்சங் உரிமையாலர் லீ 16வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :