1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2025 (18:11 IST)

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? அன்றும் வேலை செய்யலாம் என்று L&T சேர்மன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்த நிலையில், தற்போது L&T சேர்மன் எஸ்.என். சுப்பிரமணியன் என்பவர் ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை கூட போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலை பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன், ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்ப்பேன் என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊழியர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் கிடைக்கும்? வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? உங்களுடைய மனைவியை நீங்கள் எவ்வளவு நேரம் தான் பார்க்க முடியும்? எவ்வளவு நேரம் மனைவியும் கணவன் முகத்தை பார்க்க முடியும்? அலுவலகம் சென்று அதற்கு பதிலாக வேலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் என்றும், அமெரிக்கர்கள் வாரத்துக்கு 50 மணி நேரமே வேலை பார்க்கிறார்கள் என்றும், உலகின் டாப் இடத்திற்கு வர வேண்டும் என்றால் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவன நாராயண மூர்த்தி கருத்து போலவே இந்த கருத்துக்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


Edited by Siva