24 மணி நேரத்தில் இணையதளத்தில் எப்ஐஆர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய இளைஞர்கள் வழக்கறிஞர் சங்கத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில், இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள வேகம் குறைவாக உள்ள இடங்களில் 72 மணி நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறி உத்தரவிட்டனர்.