வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2025 (11:45 IST)

2026ஆம் ஆண்டுக்கு பின் மோடி அரசு இருக்காது: சிவசேனா எம்பி சஞ்சய் ரெளத்

Modi
2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் மத்தியில் மோடி அரசு இருக்காது என்று சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் எம்பி  ஞ்சய் ரெளத் என்பவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களை சஞ்சய் ரெளத் எம்பி சந்தித்தபோது, தற்போது மத்திய அரசு 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும், தனது ஆட்சி காலத்தை மோடி நிறைவு செய்ய மாட்டார் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு கலைந்தால் அது மகாராஷ்டிரா மாநில அரசியலிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடந்த நிலையில், 2029 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் ஆட்சி காலம் உள்ளது.

ஆனால், சஞ்சய் ரெளத் அவர்கள் 2026 ஆம் ஆண்டு மத்தியில் உள்ள மோடி அரசு கவிழ்ந்து விடும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே 2026 ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran