செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (15:19 IST)

வக்பு வாரியம் இருக்கலாம், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் இருக்க கூடாதா? பவன் கல்யாண்

Pawan Kalayan
வக்பு வாரியம் இருக்கும்போது, சனாதன பாதுகாப்பு வாரியம் ஏன் இருக்கக்கூடாது என்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், செய்தியாளர்களை சந்தித்த போது, "ஓ.எஸ்.ஆர்.  காங்கிரஸ் கட்சி" என்றாலே கூச்சல் குழப்பம் என்றுதான் அர்த்தம். கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை என்றால், அவர்கள் "ஓ.எஸ்.ஆர்.  காங்கிரஸ்" என அழைக்கப்படமாட்டார்கள்" என்று கிண்டல் செய்தார்.
 
"இந்தியாவில் வக்பு வாரியம் இருக்கின்ற நிலையில், சனாதன தர்ம பாதுகாப்பு முறை ஏன் இருக்கக் கூடாது?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
 
அப்படி கோரிக்கை வைப்பதாக இருந்தால், அவர்கள் ஜெர்மனிக்குத் தான் செல்ல வேண்டும். ஜெர்மனியில் தான்  வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி அமைந்துள்ளது. எனவே, இந்த கோரிக்கை வைக்கும் அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும்; இந்தியாவில் இதனை அனுமதிக்க முடியாது," என்று அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran