வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (17:13 IST)

ஹெல்மெட் அணியாமல் ... குடிபோதையில் போலீஸிடம் சண்டையிட்ட பெண் ! வைரல் வீடியோ

டெல்லியில் உள்ள மாயாபுரி என்ற பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். நேற்று இந்த சாலையில் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த ஆண் மற்றும் ஒரு பெண்ணை தடுத்து நிறுத்தினர்.
அப்போது மாதுரி என்ற பெயருடௌய அப்பெண் குடிபோதையில் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரும் ஹெல்மெட் அணியாததால் நிறுத்திய போலீஸாரிடம் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
மேலும் போதையில் உச்சத்தில் இருந்த பெண், போலீஸாரை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து இருவரும் வாகனத்தில் தப்பிச் செல்ல நினைத்தனர். ஆனால் போலீஸார் அவர்களின் வாகனத்தில் இருந்து சாவியை எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது செல்போனால் காவலரை தாக்கிவிட்டு அந்த சாவியை பறித்துக்கொண்டார்.
 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பெண் போலீஸாருடன் தகராறு செய்வதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். தற்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, அவர்கள் இருவரின் பெயர் மாதிரி மற்றும் அனில் பாண்டே என்றும், மாதுரியின் சகோதரர் இறந்துவிட்ட தகவல் அவருக்குக் கிடைத்ததால் அவர்கள் வேகமாக சென்றதாக அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.