புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (07:37 IST)

கொரோனா நோயாளி படுக்கையில் புழுக்கள்: அதிர்ச்சியில் உறவினர்கள்!

கொரோனா நோயாளி படுக்கையில் புழுக்கள்:
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சுகாதாரமான முறையில் சிகிச்சை தருவது இல்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே எழுந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் படுக்கையில் புழுக்கள் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கேரளாவை சேர்ந்த கூலித்தொழிலாளி அனில்குமார் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருடைய படுக்கையில் இருந்த பொருட்களை அவருடைய உறவினர்கள் எடுத்து வைத்தபோது படுக்கையில் பல புழுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் 
 
இதுகுறித்து அனில்குமாரின் உறவினர்கள் கேரளா சுற்றுலா சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனடியாக விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் படுக்கையில் ஏராளமான புழுக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது