செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (08:51 IST)

எனக்கே ஓட்டு போடுங்க.. குக்கர்களை அள்ளித்தரும் காங்கிரஸ், பாஜக! – கலகலக்கும் கர்நாடகா தேர்தல்!

Cooker Freebies
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டிப்போட்டு மக்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.

கர்நாடகாவில் பாஜக தலைமையிலான பசவராஜ் பொம்மையின் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பஸ் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதேசமயம் ஆளும் பாஜக மற்றும் ஜனதா தளம் கட்சியினர் ஜனசங்கல்ப யாத்திரை உள்ளிட்ட பல யாத்திரைகளை நடத்தி வருகின்றனர்.


சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பாஜக கட்சி மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை பொருப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமித்துள்ளது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க பல்வேறு திட்டங்கள், வாக்குறுதிகளோடு வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இறங்கியுள்ளன. பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி மற்றும் காங்கிரஸ் கட்சி ராமலிங்கா ரெட்டி ஆகியோர் தாங்கள் போட்டியிட உள்ள தொகுதியில் குக்கர்களில் தங்களது புகைப்படம், சின்னம் ஒட்டிய குக்கர்களை மக்களுக்கு அன்பளிப்பாக அளித்து வருகின்றனர். இதனால் கர்நாடகா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K