வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (12:40 IST)

மனிதக் கழிவை விண்கல் என நினைத்து பிரிட்ஜில் பத்திரப்படுத்திய கிராமத்தினர்

டெல்லியில் விமானத்தில் இருந்து விழுந்த மனிதக் கழிவை விண்கல் என நினைத்து அதனை பிரிட்ஜில் வைத்து பத்திரப்படுத்திய சம்பவம் பலரது கேலிக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லி அருகே உள்ள பாசில்பூர் பாடிலி என்ற கிராமத்தில், விமானத்திலிருந்து காய்ந்த நிலையில் மனிதக் கழிவு வயல்வெளியில் விழுந்தது. இதனையறிந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று அதனை பார்த்ததோடு, அதனை விசித்திர பொருள் என நினைத்து, கீழே கிடந்ததை எடுத்து வந்து தங்களின் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் இதனைப்பற்றி அறிந்த விஞ்ஞானிகள், அதன் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அது மனித கழிவு என கண்டறியப்பட்டது. இதனையறிந்த கிராம மக்கள், தங்களின் வீட்டிற்கு, தெரியாமல் எடுத்துச் சென்ற மனித கழிவை தூக்கி எறிந்து வீடுகளை சுத்தம் செய்தனர்.