1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (11:46 IST)

அமித்ஷாவின் அருகிலேயே இருக்கும் வாய்ப்பை பெற்ற ஐபிஎஸ் விஜயகுமார்

சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்து பிடித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டு காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காஷ்மீரில் 370 ஆவது பிரிவை நீக்கியதற்கு விஜயகுமாரின் ஆலோசனை தான் பெரிதும் உதவியாக இருந்ததாகக் கூறப்படுவது உண்டு 
 
இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் பதவியில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றார் என்று செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து அவருக்கு வேறு எந்த பதவியும் கடந்த இரண்டு மாதங்களாக கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது
 
உள்துறை அமைச்ச அமித்ஷாவின் பாதுகாப்பு விவகார ஆலோசகராகவும், மூத்த பாதுகாப்பு ஆலோசகராகவும் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக விவகாரங்களையும் விஜயகுமார் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது