வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 28 ஜூன் 2017 (13:03 IST)

ஜனாதிபதி தேர்தலில் மாற்று வேட்பாளராக களமிறங்கும் வெங்கய்ய நாயுடு!!

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந் அறிவிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மாற்று வேட்பாளராக வெங்கய்ய நாய்டு களமிரங்கவுள்ளார். 


 
 
ஜனாதிபதி தேர்தல் ஜுலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் 23 ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
மேலும், எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மீரா குமாரும் இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார். 
 
இந்நிலையில், ராம் நாத் கோவிந்துவின் மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 
 
துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கய்ய நாய்டு அறிவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. ஆனால், வெங்கய்ய நாய்டு இதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.