”ஆட்டோமொபைல் வீழ்ச்சி ன்னா ஏன் ரோட்டுல டிராஃபிக் இருக்கு?” அதிசய கேள்வியை கேட்ட பாஜக உறுப்பினர்
ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை என்றால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் உள்ளது?? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக உறுப்பினர்.
ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதால் அத்துறையில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல்கள் இருக்கப் போகிறது என பாஜக உறுப்பினர் வீரேந்திர சிங் கேள்வி எழுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓலா டாக்சியில் அதிகம் பேர் பயணிப்பதால் தான் ஆட்டோமொபைலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.