ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (13:48 IST)

சூரப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்....வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழகமே ஒரு பக்கம் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கொந்தளிப்புடன் போராடி வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் வாட்டாள் நாகராஜ் போராடி வருகிறார்.

இந்த நிலையில் இருமாநிலங்களுக்கும் இடையே பதட்டமான சூழல் காணப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை துணைவேந்தராக தமிழக ஆளுனர் நியமனம் செய்துள்ளார். இது எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக ஆளுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள சூரப்பாவுக்கு தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.