செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (18:03 IST)

உத்தர பிரதேசத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்றி வருவகிறார்கள்: சிவசேனா

உத்தர பிரதேசம் இஸ்லாமிய மாநிலமாக மாறி வருகிறது என்று சிவசேனா கூறியுள்ளது.


 

 
இது குறித்து சிவசேனாவின் "சாம்னா" இதழில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
 
இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காவே குலாம் அலி, இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று "இஸ்லாமிய" யாதவ் அரசு கூறுகிறது.
 
ஆனால், ஒற்றுமையை மேம்படுத்த எதற்காக பாகிஸ்தான் இசைக் கலைஞர்களை அழைக்க வேண்டும்? நம் நாட்டிலேயே புகழ்பெற்ற பல இசுலாமிய  இசைக் கலைஞர்கள் இருக்கிறார்களே?
 
எதிரிவரும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு அரசியல் திருப்பங்களை ஏற்படுத்துவதற்காக அகிலேஷ் அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம் தேச விரோத வியாபாரத்தை அது தொடங்கியுள்ளது.
 
சிறந்த கலைஞர்களைக் கொண்ட சுரங்கமாக உத்தர பிரதேசம் திகழ்ந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ள நிலக்கரியின் மீதுதான் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆர்வமாக இருக்கிறார்.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய பதன்கோட் தாக்குதலை மக்கள் மறக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.
 
குலாம் அலி இங்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கருதுபவர்கள் நாட்டின் துரோகிகள். சிறுபான்மையினரை திருப்தி படுத்துவதற்காக நாளை ஹபீஸ் சயீத் கூட வரவழைக்கப்படலாம்.
 
பயங்கரவாத தாக்குதலில் உயிர்தியாகம் செய்த ஜவான்களின் குடும்பத்தினர் கடும் துயரத்தில் உள்ள நிலையில், குலாம் அலியின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியவர்கள் மீது தேசவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
 
உத்தர பிரேதேசத்தில் 71 எம்.பி.க்களை பெற்றுள்ள பாஜக இந்த விவகாரத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
 
இந்திய அரசுக்கு ஐஎஸ் அமைப்பு தொல்லை தரும் வேளையில் முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் உத்தர பிரதேசத்தை இஸ்லாமிய மாநிலமாக மாற்றி வருவகிறார்கள். மேலும், குலாம் நபியை வரவேற்பது எல்லை தாண்டிச் செல்வதாக உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
 
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் "லக்னோ மஹோற்சவம்"  நிறைவு விழைவையொட்டி பாகிஸ்தான் இசைக் கலைஞர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
மும்பையில்யில் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி கடந்த ஆண்டு சிவசேனாவால் ரத்து செய்யப்பட்டது.

இதேபோல, போல் லக்னோ நிகழ்ச்சிக்கும் அந்த கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.