வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (07:25 IST)

மக்களவை தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு..!

upsc
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு காரணமாக யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் இந்த தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது

ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்பட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு தேர்வு தேர்வாணையம் என்ற யுபிஎஸ்சி நடத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு மே 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த தேதியில் மக்களவை தேர்தல் நடைபெறும் காரணமாக முதல் நிலை தேர்வு ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடைபெற இருப்பதன் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 யுபிஎஸ்சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக சில நாட்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவர்கள் அந்த தேர்வுக்கு கூடுதலாக தயார் செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva