புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (09:25 IST)

உடனே ஊரடங்கை அறிவியுங்கள்: உபி அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருவதால் உடனடியாக 14 நாட்கள் முழு ஊரடங்கை அறிவியுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் இன்னொரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக் குறையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் உத்தரபிரதேச அரசு நோயாளிகளின் எண்ணிக்கை உயிர் பலி எண்ணிக்கை ஆகியவற்றை குறைத்து காட்டுவதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறி வருவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து நகரங்களில் 14 நாட்கள் முழு ஊரடங்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணையின்போது மாநிலம் முழுவதும் டாக்டர்கள் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்
 
மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அனைத்தும் காகித அளவிலேயே இருப்பதாகவும் உடனடியாக செயல் அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது