1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 10 ஜூலை 2014 (11:34 IST)

2014-2015 நிதிநிலை அறிக்கை : எனக்கு கொடுக்கப்பட்ட பணி சவாலானது - அருண் ஜெட்லி

2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனக்கு சவாலான பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்க ஆனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர்.
 
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், முதலீட்டிற்கு சாதகமான வரி ஆட்சி முறை, பொருளாதார நிலையை சீரமைக்க செலவு மேலாண்மைக் குழு போன்றவை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தனக்கு சவாலான பணி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்க ஆனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விலக விரும்புவதாகவும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.