செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:35 IST)

பல்கலைகழக மானியக்குழுவின் ட்விட்டர் ஹேக்கிங்! – அதிகாரிகள் அதிர்ச்சி!

ஒபாமா, பில்கேட்ஸ் உள்பட பிரபலங்களின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்
பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு இருந்து வருகிறது.

இதன் ட்விட்டர் பக்கத்தை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில் யூஜிசியின் முக்கிய அறிவிப்புகள் இந்த ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் யூஜிசியின் ட்விட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள் அதில் ஒரு கார்ட்டூன் படத்தை வைத்துள்ளதோடு, பல அர்த்தமற்ற பதிவுகளையும் இட்டுள்ளனர். இந்த சம்பவம் யூஜிசி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.