ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:36 IST)

உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம்: ஷிண்டே அணிக்கு உதயசூரியன் சின்னமா?

Udhaya
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி இரண்டு பிரிவாகப் பிரிந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான வில் அம்பு சின்னம் இருவரும் கோரியதால் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும் தீப்பந்தம் சின்னம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் ஷிண்டே அணி உதயசூரியன், திரி சூலம், கதாயுதம் ஆகிய மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னம் ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
தமிழகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னம் ஷிண்டே அணிக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

Edited by Mahendran