செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (11:05 IST)

அடுத்தடுத்து இரண்டு புயல்கள்.. சென்னைக்கு ஆபத்தா?

Super Cyclone
அடுத்தடுத்த இரண்டு புயல்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கோடை காலம் முடிந்து அடுத்ததாக தென்மேற்கு பருவமழை உருவாவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் ஜூன் நான்காம் தேதி தென்மேற்கு பருவ மழை கேரளாவில் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் 5-ம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் ஜூன் 5ஆம் தேதி தென்கிழக்கு அரபி கடலில் வளிமண்டல சுழற்சியை உருவாக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் ஏழாம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆனால் அரபிக்கடலில் உருவாகும் இந்த ரெண்டு புயல்களால் சென்னை உள்பட தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran