ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (10:41 IST)

இரட்டை போலீஸால் திக்குமுக்காடும் உயரதிகாரிகள்: கேரளாவில் ருசிகரம்

கேரளாவில் ஒரே காவல் நிலையத்தில் இரட்டையர்கள் வேலை செய்வது அவர்களது உயரதிகாரிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
 
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சிசிது. இவரது சகோதரர் சித்தோ. இருவரும் இரட்டையர்கள் ஆவர். சிறுவயதிலிருந்தே இருவரும் போலீஸ் ஆக வேண்டும் என்ற வெறி இருந்தது.
 
பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் போலீஸ் ஆவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். விடாமல் படித்து போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2011-ம் ஆண்டு சிதோ போலீஸ் வேலையில் சேர 2012-ல் சிசிது வேலைக்கு சேர்ந்தார்.
 
இருவரும் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கரிப்பூரா போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். உயரதிகாரிகள் இவர்களில் யாரிடம் அந்தந்த வேலையை கொடுத்தோம் என்று தெரியாமல் திகைத்து வருகிறார்களாம்.