புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (11:49 IST)

கவிழும் பாஜக ஆட்சி? நிலைநாற்ற வரப்போவது யார்??

மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்து வந்த நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளாக பிரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபபெற்று வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 
 
இதனைத்தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த சுபாஷ்சந்திரா சிங், டிடி.ஹகோகிப் மற்றும் சாமுவேல் ஜின்டாய் ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
 
மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக குறைந்துள்ள நிலையில் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.