1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (18:21 IST)

டிக்கெட் கேன்சல் மூலம் மட்டும் ரயில்வேக்கு ரூ.1,230 கோடி வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

Train
ரயில்வேயில் முன் பதிவு செய்துவிட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட் கேன்சல் செய்து வருவதை பார்த்து இருக்கிறோம். இந்த வகையில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதன் மூலம் மட்டுமே ரயில்வே துறைக்கு 1230 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மத்திய பிரதேசத்தை சார்ந்த சமூக ஆர்வலர் விவேக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வியில் ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்வதால் ரயில்வே துறைக்கு வரும் வருமானம் எவ்வளவு என்று கேட்டிருந்தார்.
 
 இந்த கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே துறை கடந்த 2021 ஆம் ஆண்டு 2. 53 கோடி ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாகவும் 2022 ஆம் ஆண்டு 4.60 கோடி டிக்கெட்டுக்களும், 2023 ஆம் ஆண்டு 5.26 கோடி டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1230 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது 
 
ஏழை எளிய நடுத்தர மக்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் ரத்து செய்த நிலையில் அவர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பணம் தான் இவ்வளவு பெரிய தொகை என்றும் டிக்கெட் விலை ரத்து செய்வதற்கான கட்டணத்தை இன்னும் குறைக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran