திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (11:55 IST)

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் உயர்வு: முதலீட்டாளர்கள் நிம்மதி!

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி அடைந்து முதலீட்டாளர்கள் தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை உயர்ந்தது 55 ஆயிரத்து 660 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் வரை உயர்ந்தது 16650 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது