புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (09:35 IST)

இன்று குமாரசாமி பதவியேற்பு: மு.க.ஸ்டாலின் செல்வாரா?

கர்நாடக முதல்வராக இன்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி பெங்களூரில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்று கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கவுள்ளதை அடுத்து பெங்களூரு சட்டப்பேரவை வளாகத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்பட தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 1 லட்சம் பேர் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவில் குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராக பதவியேற்கவுளார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் துணை முதல்வராகவும் இன்னும் சிலர் அமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர். குமாரசாமி உள்பட அனைவருக்கும் கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுளார். பதவியேற்புக்கு பின்னர் நாளை சட்டப்பேரவையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி முடிவு  செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்த நிலையில் நேற்று தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூற, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற திமுக செயல்தலைவர் இன்று தூத்துகுடி செல்லவிருப்பதாகவும், அதனால் இன்றைய பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்வது சந்தேகமே என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.