வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (10:01 IST)

மீண்டும் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,39,53,475 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 214 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,50,589 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,32,71,915 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,30,971 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.