ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (08:29 IST)

காஷ்மீரில் 1000க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து! காரணம் என்ன?

காஷ்மீரில் சமீபத்தில் 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் விரைவில் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், காஷ்மீரிலும் ஜம்முவிலும் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது
 
காஷ்மீரின் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை அதிகரித்து இருப்பதாகவும், அரசு அலுவலகங்களில் பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரில் இன்னும் சில கட்டுப்பாடுகள் இருப்பதால் ஏராளமான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது., இதனால்  இறைச்சி வியாபாரிகள், சமையல்காரர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோர்களின் வருமானம் பெருமளவு குறைந்திருப்பதாக தெரிகிறது
 
இதுவரை காஷ்மீரில் எந்தவித அசம்பாவிதமும் நடந்ததாக தகவல் இல்லை என்றாலும் திருமணம் உள்பட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மாநில நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தகர்த்த வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது