1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (17:23 IST)

2017 பட்ஜெட் அறிவிப்பால் இந்த பொருட்கள் விலை உயரும்....

2017-18ம் ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் பவ்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.


 

 
இந்த ஆண்டும், தனிநபர் வருமான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் வரை பெறுபவர்களுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், 5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

இது தவிர, பணப்பரிமாற்ற கட்டுப்பாடு, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கிடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
 
மேலும், இந்த பட்ஜெட்டில் சில வரி விதிப்புகளும் இடம் பெற்றிருந்தன. இதனால் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.
 
முக்கியமாக புகையிலை, பான் மசாலா, முந்திரி பருப்பு, எல்.இ.டி பல்புகள், அலுமினியம் தாது பொருட்கள், ஆப்டிகல் இழைகள் உற்பத்திக்கு பயன்படும் பாலிமர் பூசிய நாடாக்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் போன்றவை விலை உயரும் எனத் தெரிகிறது.