திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (10:29 IST)

நம்மள நிம்மதியா வாழ விடமாட்டாங்க! – விரக்தியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!

கர்நாடகாவில் கள்ளக்காதலில் இருந்து வந்த ஜோடி தங்கள் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (25). ஆட்டோ டிரைவராக பணியாற்றிக் கொண்டே கல்லூரியிலும் படித்து வந்த ஸ்ரீகாந்திற்கு திருமணமாகி மனைவியும் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு தான் படிக்கும் கல்லூரியில் உடன் படிக்கும் தலகட்டபுரா பகுதியை சேர்ந்த அஞ்சனா (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இது அஞ்சனாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அஞ்சானைவையும், ஸ்ரீகாந்தையும் கண்டித்துள்ளனர். ஸ்ரீகாந்த் மனைவி, பெற்றோரும் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
 

இதனால் தலகட்டப்புரா அருகே உள்ள ஏரிக்கு சென்ற அவர்கள் கைகளை கட்டிக் கொண்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையே காதல் ஜோடிகளை காணவில்லை என இரு வீட்டாரும் போலீஸில் புகாரளித்திருந்த நிலையில் ஏரி அருகே தனியாய் கிடந்த கார் ஒன்றில் அவர்களது செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் அஞ்சனா தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்கு யாரும் காரணமில்லை என்றும் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

அதனடிப்படையில் ஏரியில் போலீஸார் நடத்திய தேடுதல் முயற்சியில் இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருமணம் தாண்டிய உறவை குடும்பம் ஏற்காததால் கள்ளக்காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K